உள்ளூர் செய்திகள்
கடத்தூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
- இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தது செல்லாது என இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வெளியிட்டனர்.
இதை அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் சந்தோஷ் கவுன்சிலர் சபியுல்லா, சசிகுமார், அம்பேத், பிரபா, போண்டா ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.