உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Published On 2023-05-10 14:57 IST   |   Update On 2023-05-10 14:57:00 IST
  • www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  • சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

பொள்ளாட்சி,

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாட்சி அரசு கல்லூரி முதல்வர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), பி.எஸ்.சி.(கணிதம்), பி.காம், பிபிஏ, பி.காம் (சிஏ) உள்ளிட்ட இளநிலை பாடப்பிரிவுகள் கல்லூரியில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 60 இடங்கள் உள்ளன. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

மாற்றுதிறனாளிகள், விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அதற்கான ஆதாரச் சான்றிதழ்கள், நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 25-ந் தேதி காலை வெளியிடப்படும். வருகிற 26-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜுன் 2-ந் தேதி வரை பிற பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வும் நடைபெறும்.

சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News