உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே அதிரடி ரூ.4.82 லட்சம் புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபர் கைது
- சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- காரை ஒட்டி வந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த செர்மலி (வயது 43) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் போலீசார் ரிங் ரோடு மூக்கண்டபள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்
அப்போது அந்த காரில் ரூ.4,82,300 மதிப்பிலான 218 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது. காரை ஒட்டி வந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த செர்மலி (வயது 43) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.