பா.ஜ.க. நிர்வாகிகள் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்த வந்தபோது எடுத்த படம்
ஆவணப்படஇயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. சார்பில் போலீசில் மனு
- இந்து மக்களின் மத உணர்வுகளை அவமதித்து, அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் செயல்பட்டுள்ளார்.
- ஆவணப்பட தயாரிப்பாளர், நடிகர்களை கைது செய்து, ஆவணப்படத்தையும் தடை செய்ய வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில், மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமையில், ஓசூர் டவுன் போலீசில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தான் தயாரித்துள்ள ஆவணப்படத்தை விளம்பரப்படுத்த, பெரும்பான்மையான இந்துக்கள் வணங்கும் தெய்வம் காளியம்மன் உருவத்தை அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து புகைப்படம் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவர், இந்து மக்களின் மத உணர்வுகளை அவமதித்து, அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் செயல்பட்டுள்ளார்.
மக்களிடையே பிளவை உண்டாக்கி, சமூக அமைதியை குலைத்து கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட லீனா மணிமேகலை மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர், நடிகர்களை கைது செய்து, ஆவணப்படத்தையும் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது. மனு வழங்கும் நிகழ்ச்சியின்போது, ஆலயமேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம், மற்றும் மாவட்ட பா.ஜ.க.பொதுச்செ யலாளர்கள்மனோகர், அன்பரசன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.