உள்ளூர் செய்திகள்

குடியரசு தினத்தன்று சம்பளத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை

Published On 2023-01-30 09:57 GMT   |   Update On 2023-01-30 09:57 GMT
  • சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
  • பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர்:

தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது அவா்களது சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 25 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 33 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 2 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் சாா்நிலை அலுவலகப் பணியாளா்கள் மூலம் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல், அபாயகரமான தொழில்களில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் அகற்றுதல் குறித்தான விழிப்புணா்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட தகவலை தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் தனபாலன் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News