உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதி பூஜை
- கீழப்பாவூர் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சாயரட்சை பூஜை நடைபெற்றது.
- கருடாழ்வாருக்கு நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால்,கடன் தொல்லை, திருமண தடை நீங்கும்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் சாயரட்சை பூஜையும், மாலை 6 மணியளவில் கும்பஜெபம் (அனைத்து திரவியங்களாளும் அபிஷேகம்) அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கருடாழ்வாருக்கு நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால்,கடன் தொல்லை, திருமண தடை நீங்கும், வேலைவாய்ப்பு மற்றும் சகல காரியங்களும் அனுகூலமாகும் என்பதால் நேற்று நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.