உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மின் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-07-16 14:21 IST   |   Update On 2023-07-16 14:22:00 IST
  • பண்ருட்டி அருகே மின் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஓடை தெருவில் மின் கம்பிகளுக்கு இடையூராக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின் ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றியுள்ளனர். வெட்டிய மரக்கிளைகள் வீடுகளின் முன்பு கிடந்துள்ளது. அதே தெருவை சேர்ந்த சிறபி சக்திவேல் (38) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உள்ளார்.

இதனையடுத்து தன் வீட்டின் முன்பு இருந்த மரக்கிளைகளை பார்த்து, மின் அலுவலகத்திற்கு போன் செய்து அப்பகுதி மின் ஊழியரை வரவழைத்தார். வயர்மேன் காத்தவராயன் (40) அங்கு வந்தபோது அவரை சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த வயர்மேன் காத்தவராயன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்க ப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News