விருத்தாசலத்தில் ெரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை
- ெரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- லலிதாவிற்கு சிறிது நாளாக உடல்நிலை பாதித்துள்ளது.
கடலூர்:
விருத்தாசலத்தில் ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி லலிதா(30) இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். லலிதாவிற்கு சிறிது நாளாக உடல்நிலை பாதித்துள்ள நிலையில் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான கொடுக்கூரில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்த லலிதா, விருத்தாசலம் டவுன் ெரயில் நிலையத்திலிருந்து மணிமுத்தாறு பாலத்தின் மேல் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ெரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ெரயில்வே போலீசார் லலிதா உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து லலிதாவின் குடும்ப த்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.