கோவையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு உயிரிழப்பு
- கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது
வடவள்ளி,
கோவை நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர்நிர்மல்ராஜ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி (வயது 25) என்பவரை காதல் திரும ணம் செய்து கொண்டார்.
கணவனும் மனைவியும் அங்கு உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள் ளன.
இந்த நிலையில் நிர்மல் ராஜ் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன. எனவே அவர் நந்தினியிடம், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யமாட்டாயா என்று கூறி கண்டித்து உள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிர்மல் ராஜ் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு நந்தினியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், நான் உங்களுக்கு கடைசியாக அனுப்பும் மெசேஜ் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
எனவே அதிர்ச்சி அடைந்த நிர்மல்ராஜ் அவசரம்- அவசரமாக வீட்டிற்கு சென்றார். அதற்குள் வீட்டில் நந்தினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.