உள்ளூர் செய்திகள்

மழைநீரில் யானை குளித்த காட்சி.

காட்டாற்றில் குளித்து மகிழும் காட்டு யானை

Published On 2023-05-04 14:10 IST   |   Update On 2023-05-04 14:10:00 IST
  • யானைகள் உணவு , தண் ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் நுழைகிறது.
  • காட்டாற்றில் பெருக்கெடுத்த தண்ணீரில் யானை ஒன்று குளித்து கும்மாளமிட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் காவரி வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் வனப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. உணவு , தண் ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதும், அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிப்ப தும் வழக்கமாக உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டியெடுப்பதால்,வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. யானைகளை தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர்,தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்செட்டி பகுதியில் பெய்த மழையால், காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தொட்டல்லா ஆற்றில் பாய்ந்தோடியது. அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி என்னுமிடத்தில் காட்டாற்றில் பெருக்கெடுத்த தண்ணீரில் யானை ஒன்று குளித்து கும்மாளமிட்டது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்றவர்கள், அப்பகுதியில் திரண்டனர்.

இது குறித்து தகவலறிந்த அஞ்செட்டி வனத் துறையினர் விரைந்து சென்று யானையை அடந்த வனப்பகுதிக்குள் விரட்டினர் யானை மழை தண்ணீரில் அங்கும், இங்கும் செல்வதை சிலர் செல்போன்களில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News