உள்ளூர் செய்திகள்

முக்கூடல் பஸ் நிலையத்தில் 3 மாதங்களாக எரியாத உயர்மின்கோபுர விளக்கு- அரிக்கேன் விளக்கை ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-08-02 09:47 GMT   |   Update On 2023-08-02 09:47 GMT
  • முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

முக்கூடல்:

முக்கூடல் பேரூராட்சிக்கு ட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த மின்விளக்கு திறப்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் பதில் இல்லை. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று உயர் மின்கோபுரத்திற்கு முன்பாக அரிக்கேன் விளக்கு மற்றும் ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் முக்கூடல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News