உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே வேன் மோதி வாலிபர் பலி

Published On 2023-05-01 13:44 IST   |   Update On 2023-05-01 13:44:00 IST
  • பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சீபம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது25). இவர் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை-உலகம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News