உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

மேலப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 'திடீர்' முற்றுகை போராட்டம்

Published On 2022-08-18 09:31 GMT   |   Update On 2022-08-18 09:31 GMT
  • மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகளுக்கு ஆபரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.
  • மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளை யத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டாக்டர் பற்றாக்குறை

இந்நிலையில் இங்கு பிரசவத்திற்காக சிகிச்சை பெற்று வரும் 7 கர்ப்பிணி களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கூறி குறிப்பிட்ட தேதியையும் ஒதுக்கிய தாக கூறப்படுகிறது. ஆனால் மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி களுக்கு ஆப ரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News