கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.
தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பில் தேசிய கல்வி கொள்கை விளக்க சிறப்பு கருத்தரங்கம்
- கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் தங்ககணேசன், மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தேசிய கல்வி கொள்கை பற்றி விளக்கஉரை ஆற்றினர்.
- மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட நிர்வாகி சிவராமன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
தூத்துக்குடி;
தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பில் தேசிய கல்வி கொள்கை விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சின்ன தங்கம் தலைமை தாங்கி னார். மாநில செயலாளர் சிவசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன், வடக்கு மாவட்ட பொதுச் செய லாளர் கிஷோர்குமார், விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் தங்ககணேசன், மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன் ஆகி யோர் தேசிய கல்வி கொள்கை பற்றி விளக்கஉரை ஆற்றினர்.
கருத்தரங்கில் பள்ளி,கல்லூரிகளில் பணி யாற்றும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு நிர்வாகிகள். மாவட்ட துணை தலைவர் சுதா, மாவட்ட செயலாளர்கள் முருகன், திருச்செந்தூர் நகர தலைவர் கிருஷ்ண ஐயர்,கல்வியாளர் பிரிவு பெருங்கோட்டப் பொரு ப்பாளர் ஜெய கண்ணன், மாநில செயலாளர் தளவாயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட நிர்வாகி சிவராமன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலா ளர்கள் முருகேஷ், சரவ ணன், சுசீந்திரன், மண்டல் தலைவர்கள் ரமேஷ், முத்து ராமலிங்கம், சரவணன், சங்கரநாராயணன், தாமஸ் மற்றும் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், முத்துசாமி, முனியசாமி, சோடாமுருகேசன், ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், ஜெயகுமார், மாவட்ட விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாநகர தெற்கு மண்டல் தலைவர் மாதவன், மகளிர் அணி தலைவி செல்வி முருகன், சேர்ம லிங்கம், முத்துகிருஷ்ணன், மணிகண்டன், ஆறுமுகநேரி முருகேசபாண்டியன், அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.