உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்த காட்சி.

ராசிபுரத்தில் ஆசிரியைகளுக்கான சிறப்பு கருத்தரங்கம்

Published On 2023-04-05 12:23 IST   |   Update On 2023-04-05 12:23:00 IST
  • ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆசிரியைகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
  • மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆசிரியைகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் நகராட்சி தலைவி கவிதா சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மன்றத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் அரசியல் அதிகார பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமை தரப்பட வேண்டும். தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில், விலையில்லா கல்வி தரவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News