சிறப்பு யாகம் நடந்தது.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்தரீ பூர்ணாம்பிகை புஷ்கலா அம்பிகை சமேத மகா காராள சேவுக அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக் கோவிலில் ஆவணி மாத, ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மஹா ஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழியவும் வேண்டி மஹா யாகம் நடைபெற்றது.
பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது.
நிறைவாக யாகம் பூர்ணாகுதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.