கர்நாடகாவில் இருந்து சூளகிரி நோக்கி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.
சூளகிரி-பேரிகை சாலையில் தொடர் விபத்து: கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்க மக்கள் கோரிக்கை
- சாலையில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், 8 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
- வளைவில் திரும்ப முயலும் போது நேற்று கனரக வாகனம் சாலை ஒர கழிவு நீர் கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-பேரிகை-கும்பளம் செல்லும் சாலை வணிக வளாகங்கள், உருது பள்ளி ,ஆரம்ப பள்ளி, வட்டார மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியாகும்.
இந்த சாலையில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், 8 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை கர்நாடகா, ஆந்திராவிற்கு செல்ல எளி தான சாலை என்பதால் கனரக வாகனங்கள் இந்த சிறிய சாலையில் செல்வதனால் முனியம்மா கோவில் வளைவில் திரும்ப முயலும் போது நேற்று கனரக வாகனங்கள் சாலை ஒர கழிவு நீர் கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.
ஏற்கனவே பல கனரக வாகனங்கள் கழிவு நீர் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பயத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க இரும்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் சாலையை விரிவுபடுத்தி கழிவு நீர் கால்வாய் மேல் பரப்பில் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.