உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-01-06 15:00 IST   |   Update On 2023-01-06 15:00:00 IST
  • மதுரா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • பராமரிப்பு முறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கபிலர்மலை வட்டார அட்மா தலைவரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னங்கன்றுகள் வழங்கி, நடவு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, உழவன் விவசாய சங்கத் தலைவர் சண்முகம், கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் தளபதி சுப்ரமணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News