உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியார் நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் கையாடல் செய்த மேலாளர்

Published On 2023-09-29 14:42 IST   |   Update On 2023-09-29 14:42:00 IST
  • முத்துகுமார் ரூ.50 ஆயிரத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் முத்துக்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.

கோவை,

கோவை டவுன்ஹாலை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 40). இவர் சூலூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் நீலாம்பூரில் உள்ள தனியார் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் மண்டல மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எங்களது நிறுவனத்தில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த முத்துக்குமார் (33) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று நான் வசூலான பணத்தை கணக்கு பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது ரூ.50 ஆயிரம் குறைவாக இருந்தது. இது குறித்து நான் மேலாளர் முத்துக்குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். பின்னர் இதுகுறித்து நான் காசாளரிடம் கேட்ட போது, மேலாளர் முத்துக்குமாரிடம் கேட்ட போது வசூலான முழு பணத்தையும் கொடுத்து விட்டதாக கூறினார்.

இதனையடுத்து நாங்கள் தலைமறைவான மேலாளரை தேடிய போது அவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்று முத்துக்குமாரை மடக்கி பிடித்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ரூ.50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.

எனவே நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்த மேலாளர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் முத்துக்கு மாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News