உள்ளூர் செய்திகள்

மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2022-11-18 13:10 IST   |   Update On 2022-11-18 13:10:00 IST
  • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
  • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

Tags:    

Similar News