உள்ளூர் செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி நிற்கும் காட்சி.

கடலூரில் ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது-2 பேர் படுகாயம்

Published On 2023-04-09 13:03 IST   |   Update On 2023-04-09 13:03:00 IST
  • இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது.
  • இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர்:

விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த அரசு பஸ் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஷேர் ஆட்டோ பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது திடீரென்று அரசு பஸ் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது ஷேர் ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஷேர் ஆட்டோவில் இருந்த 2பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரில் முக்கியசாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்சிற்குள் சிக்கி இருந்த ஷேர் ஆட்டோவை பாதுகாப்பாக மீட்டு சாலை ஓரத்தில் நிறுத்தினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News