உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2023-09-13 13:01 IST   |   Update On 2023-09-13 13:01:00 IST
  • பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை(48 )விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவட்டியில் இருந்து வெங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் 200 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News