மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து சாவு
- எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது.
- நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்செவலாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் திருமலை (வயது 45)விவசாயி.நேற்று மாலை மேல்செவலாம்பாடியில் இருந்து எயில் பகுதியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. பின்னர் நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அதிகாரி பரஞ்சோதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த திருமலை உடலை மீட்டு அவலூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவலூர்பேட்டை போலீசார் திருமலை உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.