உள்ளூர் செய்திகள்
குட்டையில் விழுந்த பசுமாட்டினை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
விருத்தாசலம் அருகே குட்டையில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- விருத்தாசலம் அருகே குட்டையில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
- விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டது.
கடலூர்:
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்த ராஜதுரை (வயது.46), விவசாயி. இவருடைய பசு மாடு ஒன்று, மங்கலம்பேட்டையில், விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.