உள்ளூர் செய்திகள்

கோவையில் கடிதம் எழுதி வைத்து விட்டு காண்டிராக்டர் தற்கொலை

Published On 2023-02-26 09:46 GMT   |   Update On 2023-02-26 09:46 GMT
  • மனைவி விவாகரத்து பெற்றதால் விபரீத முடிவை எடுத்தார்.
  • ‘வங்கி பணத்தை எடுத்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டுேகாள் விடுத்தார்.

கோவை

கோவை தடாகம் அருகே உள்ள பன்னிமடை ஏ.என்.டி. நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). டிரான்ஸ்போர்ட் காண்டிராக்டர்.இவருக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து வனிதா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.வனிதா விவாகரத்து கேட்டு தனது கணவர் வினோத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அவரும் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி 2 பேருக்கும் விவாகரத்து வழங்கினார். இதனால் வினோத்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வினோத்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு வினோத்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அண்ணா, பாப்பாவை நன்றாக பார்த்துக்கொள். கடந்த 10 மாதங்களாக எனக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கொண்ட பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு நன்றி. அண்ணா என்னுடைய எல்.ஐ.சி. பணத்தை எடுத்து வங்கியில் டெபாசிட் செய்து உள்ளேன். அந்த பணத்தை எடுத்து என் இறுதி சடங்கிற்கு செலவிடவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News