உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்-வாலிபர் மீது வழக்கு
- சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார்.
கடலூர்:
பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த கானாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஜயா (40) என்ற பெண் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காடாம்புலியூர் போலீசார், தப்பியோடிய ஞானவேலுவை தேடி வருகின்றனர்.