உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி

Published On 2023-04-05 12:34 IST   |   Update On 2023-04-05 12:34:00 IST
  • காலை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்செங்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • கணக்கம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென இளமுருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தளிகை, சுப்பன்நாய்க்கனூரைச் சேர்ந்த தலமநாய்க்கர் மகன் இளமுருகன் (வயது 46). இவர் நாமக்கல், நல்லியாம் பாளையம் மின்சார வாரியத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று காலை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருச்செங்கோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேலகவுண்டம்பட்டி அருகே கணக்கம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென இளமுருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இளமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வேலகவுண்டன் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை

இதனிடையே, இளமுருகன் மீது மோதிய கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி சாலை ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டி வந்த டிரைவர் கணேசன் (38) காயம் அடைந்தார். அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான இளமுருகனுக்கு பத்மினி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வேல கவுண்டம்பட்டி போலீசார், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர். காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News