உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் பெட்ரோல் பங்கில் தீ பிடித்து எரிந்த கார்

Published On 2023-06-10 14:53 IST   |   Update On 2023-06-10 14:53:00 IST
  • இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
  • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பெட்ரோல் பங்கிற்கு கியாஸ் நிரப்புவதற்காக மோகன் என்பவர் அவரது காரை ஓட்டி வந்தார்.

கார் பங்கிற்குள் வந்த போது திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் காரில் தீ வேகமாக பரவியது.

உடனடியாக அங்கு இருந்தவர் தீ பிடித்த காரை கிரேன் மூலமாக அங்கு இருந்து அகற்றினர். சற்று நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் காரில் எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News