உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட கரடியின் உடல்பாகம்.

களக்காடு மலையடிவாரத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி பலி- சடலத்தை புதைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2022-10-15 09:02 GMT   |   Update On 2022-10-15 09:02 GMT
  • சிலர் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
  • மர்ம நபர்கள் கரடியின் சடலத்தை குழி தோண்டி புதைத்துள்ளனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் போகாமல் இருக்க சிலர் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல களக்காடு கீழ வடகரை மலையடிவார தோட்டத்தில் சிலர் மின்சார வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த கரடி மின் வேலியில் சிக்கி பலியாகி உள்ளது.

இதை பார்த்த மர்ம நபர்கள் கரடியின் சடலத்தை அருகில் உள்ள குளத்து பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இது பற்றி களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் புதைக்கப்பட்ட கரடியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கரடியின் உயிரிழப்புக்கு காரணமான மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News