என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bear Died"
- சிலர் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
- மர்ம நபர்கள் கரடியின் சடலத்தை குழி தோண்டி புதைத்துள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் போகாமல் இருக்க சிலர் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல களக்காடு கீழ வடகரை மலையடிவார தோட்டத்தில் சிலர் மின்சார வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த கரடி மின் வேலியில் சிக்கி பலியாகி உள்ளது.
இதை பார்த்த மர்ம நபர்கள் கரடியின் சடலத்தை அருகில் உள்ள குளத்து பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இது பற்றி களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் புதைக்கப்பட்ட கரடியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கரடியின் உயிரிழப்புக்கு காரணமான மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.