உள்ளூர் செய்திகள்

9-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-12 15:22 IST   |   Update On 2023-08-12 15:22:00 IST
  • ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
  • தாயின் புடவையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் சிவகிரி (வயது 14). இந்த சிறுவன் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகிரி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது தாயின் புடவையில் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவகிரியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவகிரியின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனுக்கு அஇஅமபள்ளியில் டார்சர் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மாணவன் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News