உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு யூனியன் சேர்மன் பாலசிங், துணை சேர்மன் மீரா ஆகியோர் பிரியாணி வழங்கிய காட்சி.

உடன்குடி ஒன்றிய பகுதியில் தி.மு.க சார்பில் 7500 பேருக்கு நலதிட்ட உதவிகள்

Published On 2022-11-28 14:55 IST   |   Update On 2022-11-28 14:55:00 IST
  • உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
  • ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உடன்குடி:

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. உடன்குடி மேற்கு ஓன்றியத்தில் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் பல்வேறு விடுதிகளில் உள்ள மாணவர்க ளுக்கு கல்வி உபகரணங்கள், பள்ளிச் சீருடைகள், மதிய உணவு, இனிப்புகள் வழங்கல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி கிறிஸ்தியா நகரத்தில் நவஜூவன் இல்ல மாணவர்களுக்கு ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி, தண்டுபத்து, சீர்காட்சி, நயினார்பத்து, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் நலிந்தோர்களுக்கு தையல் எந்திரம், சலவை எந்திரம், பள்ளிச் சீருடைகள், சேலைகள் வழங்கப்பட்டது.உடன்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் நலிந்தோர்களுக்கு அரிசி, பள்ளிப் பைகள் வழங்கப்பட்டது. மொத்தம் 7500பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் ஊர் ஊராகச் சென்று வழங்கினர். நிகழ்ச்சிகளில் உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ். முன்னாள் போருராட்சி கவுன்சிலரும் 3-வது வார்டு செயலாளருமான சலீம் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News