உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். 

சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

Published On 2022-06-18 08:59 GMT   |   Update On 2022-06-18 08:59 GMT
  • சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
  • வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகம் முன்பு நடந்தது. கல்லூரியின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன்,

கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன்..ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமநாதன்.புவனகிரி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர்டாக்டர் மனோகர்ஆ கியோர்முன்னிலை வகித்தனர்.

வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்.இந்த பட்டமளிப்பு விழாவில்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு 608 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

பட்டமளிப்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் சபாபதி முருகன், பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்.பினர் கிள்ளைரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவ மாணவிகள்பெற்றோர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.முடிவில் உதவி முதல்வர்மீனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News