உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் தொடர்புடைய கும்பலுக்கு 6 ஆண்டுகள் சிறை

Published On 2022-06-22 10:11 GMT   |   Update On 2022-06-22 10:11 GMT
  • வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி, 3 லட்சம் பணம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
  • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20 ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி டி.வி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்நிலையில் கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி, நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர், நாகை சிவன் தெற்கு வீதியை சேர்ந்த தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்ட 4பேர் கொண்ட போலீசார் அதிரடியாக கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகப்பன்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொட ர்புடைய கொறசேகர் என்பவர் மீது அண்மை யில் குண்டாஸ் சட்டம் பாய்ந்திருப்பதும் குறிப்பி டத்தக்கது.

Tags:    

Similar News