உள்ளூர் செய்திகள்

குடியிருப்புக்குள் குட்டியுடன் நுழைந்த 6 காட்டு யானைகள்

Published On 2023-03-04 17:08 IST   |   Update On 2023-03-04 17:08:00 IST
  • திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
  • யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை:

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் குடிநீரை தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. அப்போது குடியிருப்பையொட்டி விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை மதுக்கரை வனத்தை விட்டு 6 காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறின. அந்த காட்டு யானைகள் நேராக மதுக்கரை வனத்தில் இருந்து பச்சாபாளையம் நோக்கி வந்தன.

அதிகாலையில் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் கோவைப்புதூர் அருகே உள்ள பச்சாபள்ளியில் குடியிருப்பு பகுதிக்குள் 6 யானைகளும் குட்டியுடன் நுழைந்தது.

ஊருக்குள் குட்டியுடன் யானை புகுந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே தெருவில் நடந்து சென்ற யானை கூட்டத்தை பார்த்தனர்.

திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானை கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றியது. அதன் பிறகு யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவைப்புதூர் பகுதியில் யானை கூட்டம் நுழைந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News