கைது செய்யபட்டவர்கள்.
டிப்பர் லாரியை வழிமறித்து தகராறு செய்த 6 பேர் கைது
- தகராறை தடுக்க சென்ற நாகபூசணத்தை கீழே தள்ளி தாக்கிள்ளனர்.
- புகாரின் பேரில் மஞ்சுநாத், ரமேஷ், சீனிவாசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடவிசாமிபுரம் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் தினந்தோறும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் ஊர் வழியாக சென்று வருகின்றன.
நேற்று டிப்பர் லாரிகளை அடவிசாமிபுரம் கிராமத்தைச் மஞ்சுநாத்(27), ரமேஷ்(26), மற்றும் சீனிவாசன் (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்ட அடவிசாமிபுரம் கிராமத்தைச்சேர்ந்த மதுகுமார்(24), ஜகதீஸ்(38), சுனில்குமார் (24), பிரன்சிஸ்ராஜா(32) ஆகியோர் ஏன் லாரிகளை தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மஞ்சுநாத் தரப்பினர் மதுகுமாரை கல்லால் தாக்கியுள்ளனர்.
தடுக்க சென்ற மதுகுமார் தந்தை முனிராஜ் (50) என்பரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்எஸ்ஐ நாகபூசணம் (51) மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்து கொண்டிருந்த போது மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தகராறை தடுக்க சென்ற நாகபூசணத்தை கீழே தள்ளி தாக்கிள்ளனர். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நாகபூசணம், மதுகுமார், முனிராஜ் ஆகியோர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து முனிராஜ் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சுநாத், ரமேஷ், சீனிவாசன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அதே போல் மஞ்சுநாத் தரப்பில் ராஜப்பா மகன் தர்சன்(17) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜகதீஸ், சுனில்குமார், பிரான்சிஸ் ஆகிய மூவரை கைது செய்தனர். கைதான 6 பேரை தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இருத்தரப்பினர் மற்றும் பலரை தேடி வருகின்றனர்.