உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி 5-வது வார்டில் பூங்காவில் மரக்கன்றுகள் நடவு பணி
- மாநகர பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மேயர்எஸ்.ஏ. சத்யா மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு ஆனந்தநகர் பகுதியில் உள்ள மாநகர பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்மேயர்எஸ்.ஏ. சத்யாகலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.