உள்ளூர் செய்திகள்

தண்ணீரில் மூழ்கி 5 பேர் பலி: வால்பாறை நல்லகாத்து ஆற்றில் அமைச்சர் ஆய்வு

Published On 2023-10-22 14:55 IST   |   Update On 2023-10-22 14:55:00 IST
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
  • அந்த பகுதியில் இறந்த மாணவர்களின் புகைப்படங்களை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இருந்து 10 கல்லூரி மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

இவர்கள் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தனர். அப்போது 5 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

அவர்கள் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இடத்தை, அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு, இனி இதுபோன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அதிகாரிகள், அங்கு பொதுமக்கள் செல்லாதவாறு வேலி அமைத்து தடை விதிக்கலாம் என தெரிவித்தனர். அதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அந்த பகுதியில் இறந்த மாணவர்களின் புகைப்படங்களை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட செயல்லார் தளபதி முருகேசன், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், தாசில்தார் அருள்முருகன், நகராட்சி ஆணையாளர் பேற்பெட்டி லியோ, நகர செயல்லார் சுதாகர், முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News