உள்ளூர் செய்திகள்

கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு 'சீல்'

Published On 2022-09-21 08:11 GMT   |   Update On 2022-09-21 08:11 GMT
  • மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
  • குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.

இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News