உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் குதிரை ஓட்டும் வாலிபர் கொலையில் 4 பேர் கைது
- ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக உடும்பன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது.
மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ரூபன் என்கிற உடும்பன் (வயது23). மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக செய்யாறை சேர்ந்த பாலாஜி, மாமல்லபுரம் சதீஷ்குமார், பட்டிபுலம் கார்த்திக், அருலேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் மாமல்லபுரம் கடற்கரையில் வாடகைக்கு குதிரையை வாங்கி ஓட்டும் தொழில் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக உடும்பன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.