உள்ளூர் செய்திகள்

கோவை லோக் அதாலத் மூலம் 3032 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-09-10 09:20 GMT   |   Update On 2023-09-10 09:20 GMT
  • பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ வழிவகை செய்யப்பட்டது
  • 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு

கோவை, 

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

சுமூக தீர்வு காணப்படுவதால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான விஜயா இதனை தொடங்கிவைத்து, மோட்டார் வாகன விபத்தில் கணவரை இழந்த சுகன்யா, அவரது குடும்ப த்தினருக்கு இழப்பீ ட்டு தொகையாக ரூ.32 லட்சத்தை வழங்கினார்.

இதேபோல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், அன்னூர், மதுக்கரை நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 3032 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு, முறையீட்டாளர்களுக்கு ரூ.35.39 கோடி தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முரளிதரன், கோவிந்த ராஜ், சுந்தரம், ரவி, சார்பு நீதிபதிகள் நம்பிராஜன், சிவகுமார், மோகனம்பாள், மோகனரம்யா, ஹரிஹரன், உரிமையியல் நீதிபதி தேவராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 16 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் சஞ்சீவி பாஸ்கர், கே.அருணாசலம், சார்பு நீதிபதிகள் கங்காராஜ், மோகனவள்ளி, கவுதமன், வேதகிரி, கலைவாணி, உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 25 அமர்வுகள் மூலம் தாலுகா அளவிலும் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார்.

சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள், சிவில் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் கோவையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 88 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும், பிரிந்து வாழ்ந்த 7 தம்பதிகள் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

இதேபோல், வழக்கு களை மாற்றுமுறையில் தீர்வு காணவும், இலவச சட்ட உதவி பெறவும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News