உள்ளூர் செய்திகள்

படுகாயம் அடைந்த வாலிபர்களை படத்தில் காணலாம்.

பண்ருட்டி- கடலூர் ரோட்டில் சாலையோர குழியில் விழுந்து 3 வாலிபர்கள் படுகாயம்

Published On 2023-09-15 09:56 GMT   |   Update On 2023-09-15 09:56 GMT
  • எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த ஆபத்தான மரணக்குழியில் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.
  • 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

கடலூர்:

பண்ருட்டி அடுத்த திருவதிகை செட்டி பட்டறை காலனியை சேர்ந்தவர் தமிழ் வளவன்(26).இவர்தனது மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு விவசாய வேலையாக பண்ருட்டிக்கு வந்தார். அதே பகுதியை சேர்ந்த அகிலன் (21), வீரவேல் (20)ஆகியோர் இவருடன் அதேமோட்டார் சைக்கிளில் வந்தனர் பண்ருட்டி-கடலூர் சாலை தண்டு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்தஆபத்தான மரணக்குழியில்மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.

அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயத்துடன் சாலையோர கால்வாயில் விழுந்து கிடந்த தமிழ் வளவன்,அகிலன்,வீரவேல் ஆகிய 3 பேரையும்மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News