உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

ஆண்டிபட்டி அருகே தொழிலாளியிடம் ரூ.21.64 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

Published On 2022-06-22 05:26 GMT   |   Update On 2022-06-22 05:26 GMT
  • கேஸ் ஏஜென்சி அனுமதி பெற்று தருவதாக ரூ.21 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பந்தல்தொழிலாளி கேஸ் ஏஜென்சி பெற ஒரு இணையதளத்தில் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டார். பின்னர் 3 எண்களில் இருந்து கேஸ் நிறுவன மேலாளர் பேசுவதாக ஒருவர் பேசியுள்ளார்.

அவர் இந்தியில் பேசியதால் பணிபுரியும் தனது உறவினர் மூலம் அவரிடம் செல்போனில் பேசிஉள்ளார். அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 700 செலுத்தி உள்ளனர்.

பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டு கேஸ் ஏஜென்சி தொடங்குவது குறித்து பேச முயன்றனர். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலாளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அவர் செலுத்திய வங்கி கணக்கு பீகாரை சேர்ந்தது என தெரியவந்தது. இதுகுறித்து பீகார் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்ட ரோசன்குமார், தீபக்குமார், பல்ராம் ஆகிய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர்.

Tags:    

Similar News