கருமத்தம்பட்டி பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
- திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்
- கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னராஜ் (வயது 27), கருமத்தம்பட்டியை சேர்ந்த விஜய் (30), சோமனுரை சேர்ந்த விக்ரம் (22) என்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.