உள்ளூர் செய்திகள்
திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவலர் மனோகரன் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிழக்கு மருதூர் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றபோது, கிழக்கு மருதுறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), ஜெகதீசன் (44) சோமாசிபாலயம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 3 பேரும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.