உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-07-01 09:28 GMT   |   Update On 2022-07-01 09:29 GMT
  • தனியார் ஆஸ்பத்திரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
  • 4 கிலோ கஞ்சா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை:

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

கோவில்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சாவை பதுக்கி விற்ற தேவம்பாளையத்தை சேர்ந்த விஜயன் (36), உத்தமபாளையத்தை சேர்ந்த அங்குராஜா (49) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சலீவன் வீதி வழியாக சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சக்திவேல்(24) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா ரூ. 2,300 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாய்பாபா காலனி போலீசார் அம்பேத்கார் வீதி கட்டபொம்மன் வீதி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 130 கிராம் கஞ்சாவை கடத்தி வந்த ரத்னபுரியைச் சேர்ந்த ரமேஷ் (49) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News