உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

வாக்காளர் சிறப்பு முகாமில் 23,267 படிவங்கள் பெறப்பட்டது- கலெக்டர் தகவல்

Published On 2022-11-18 09:29 GMT   |   Update On 2022-11-18 09:29 GMT
  • கடந்த இரண்டு நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை களின் படி கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

இச்சிறப்பு முகாம்களில் 15704 படிவம் 6 ம், 2122 படிவம் 7 மற்றும் 5441 படிவம் 8 ம் ஆக கூடுதலாக 23267 படிவங்கள் பெறப்பட்டது.

மேலும், ஆன்லைன் மூலமாக 1205 படிவம் 6-ம், 3187 படிவம் 7 மற்றும் 1903 படிவம் 8-ம் ஆக கூடுதலாக 6295 படிவங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் எதிர்வரும் 26 (சனிக் கிழமை) மற்றும் 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்று கிழமை) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News