உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே டிப்ளமோ மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-04 16:12 IST   |   Update On 2022-06-04 16:12:00 IST
கள்ளக்குறிச்சி அருகே அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் டிப்ளமோ மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. அவரது  மகன் கார்த்திகேயன் (வயது19) திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த மாதம் உதயமாம்பட்டில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து இவரது அக்கா பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News