உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-04 15:00 IST   |   Update On 2022-06-04 15:00:00 IST
கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மெகா துப்புரவு பணி விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் சார் பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் இளங்கோ வரவேற்று பேசினார். 

நகர்மன்றத் தலைவர் ஹபிபூர் ரஹ்மான் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதன் பின்னர்  தமிழக அரசின் மஞ்சள் பை உபயோகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார் . அதன் பின்னர் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றினார்.

 நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா,   நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ -மாணவிகள், தாருஸ்ஸலாம் பள்ளி மாணவ- மாணவிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள்,காவல் துறை அதிகாரிகள், தூய்மை இந்திய திட்டம் மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்  பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News