உள்ளூர் செய்திகள்
செல்வராஜ் எம்.பி

புதிய தேசிய கல்வி கொள்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது - எம்.பி கண்டனம்

Published On 2022-06-03 14:53 IST   |   Update On 2022-06-03 14:53:00 IST
மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை மாணவர்கள் நலனுக்கு எதிரானது என செல்வராஜ் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99ம் ஆண்டு பிறந்தநாள் விழா திருக்குவளையில் விமர்சியாக கொண்டாட ப்படுகிறது. அதன் ஒருபகுதியாக திருக்குவளை இல்லத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு செல்வராசு எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில்; மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை தமிழக மக்கள் மட்டுமின்றி பொதுவாகவே கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிரானது. 

புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படு த்தப்பட்டால், தொடர் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படும். மாணவர்கள் கல்வியை தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படும்.

தேசிய கல்வி கொள்கை யை தமிழக மக்கள் சரியாக படிக்கவில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழக மக்களின் நலனையும், உரிமைகளையும் மிக கண்ணியத்துடன் எடுத்து க்கூறிய தமிழக முதல்வரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கத்துக்குட்டி தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 14 ஆயிரத்து 164 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டதால்தான் 9 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. 

இதுபோன்று தமிழக மக்களுக்கு எதிரான கருத்து க்களை அண்ணாமலையும், பாஜகவினரும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News